சுமார் 15 வருடங்களுக்கு முன்பு 

    நான் ( இராமரிஷி ) ஒருமுறை எதர்ச்சையாக ஒரு சாதுவை சந்திக்க நேர்ந்தது அவர் ரோட்டில் ஆனந்தமாக நடந்து சென்று கொண்டிருந்தார் அந்த வெய்யிலும் சிறிதும் தளர்வில்லாத நடையும் பாட்டும் அவர் ஒரு அடியார் என்பதை கேட்காமலேயே உணர்த்தியது. அவர் அருகில் சென்ற நான்
 

நான்:- ஐயா வணக்கம்
 

சாது:- யாருக்கையா உங்கள் வணக்கம் எனது உடலுக்கா இல்லை எனது தோற்றத்திற்கா இல்லை எனது ஆன்மாவிற்கா என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய சிரிப்பு
 

நான்:- பதில் ஏதும் கூற முடியாதவனாய் நின்றேன்.
 

சாது:- நீ வணக்கம் சொல்லும் அளவிற்கு நான் ஒன்றும் தகுதியானவன் அல்ல.
என் தோற்றத்தை கண்டு நீ வணக்கம் செலுத்தியிருந்தால் அது உனது அறியாமை நான் உடலெங்கும் பூசி உள்ள திருநீறு முழுவதும் கிருமி தொற்றில் இருந்து என்னைக் காக்கும் கவசமே ஆகவே எனது வேடம் என் பாதுகாப்பு சுயநலத்திற்காக போட்டுக் கொண்டது அது இடத்திற்கு இடம் மாறும் மலைகளிலே பச்சிலைக்காப்பு, குகைகளிலே பஸ்பக்காப்பு
 

நான்:- என்ன சொல்வதென்றே தெரியாமல் அமைதியாக நின்றிருந்தேன்
 

சாது:- நான் புறப்படுகிறேன் என்ற வார்த்தையை கண்களின் மூலமாகவே உதிர்த்தார்
 

நான்:- சிறிது முந்திக்கொண்டு ஐயா உணவு உண்கிறீர்களா?
 

சாது:- ஓ என் பசியை ஆற்ற உன்னால் முடியுமா?
உடலுக்கான பாசி சிறிதும் இல்லை என்று கூறியவர் வாயில் அடக்கிக் கொண்டிருந்த நெல்லிக்கனி அளவுள்ள ஒரு உருண்டையை காட்டி இந்த ஒரு உருண்டையை வாயில் அடக்கிக் கொண்டாள் உலக உருண்டையை எத்தனை முறை வேண்டுமானாலும் சுற்றலாம் பசிக்காது தாகமும் எடுக்காது என்று சொல்லிக்கொண்டே ஒரு புன்னகையுடன் என் மனதிற்கும் பசியில்லை உள்ளமும் நிறைந்துள்ளது இந்த ஆன்மாவிற்கு மட்டும் தான் பிறவி பினி தீர்க்கும் பசி உள்ளது என்று கூறிக்கொண்டே என்னைப் பார்த்தார்.
 

நான்:- ஐயா ஆசியாவது வழங்குங்கள்!
 

சாது:- சத்தமாக சிரித்தவாறு

'' கொடுக்க அவன் வாங்க நீ ''

என்று சொல்லி பலமாக சிரித்துக்கொண்டே நகர்ந்தார்.

 

அன்றுதான் உணர்ந்தேன் இறைவனிடம் பெறும் வழிகளையே கண்டு உணர வேண்டும் உண்மையான இறை அடியார்களுக்கு நாம்மிடமிருந்து பெற்றுக் கொள்ள எதுவும் இல்லை என்றும்
ஒவ்வொரு மானிடரும் தான் இறைவன் ஆக மாறுவதே பிறவி பினி தீர்க்கும் மருந்தாகும்
ஐயா யோகியாரிடம் இருந்து பெற்ற அனுபவக் கல்வி.